யாழ் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!

யாழ் பல்கலைக்கழக  மாணவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த இளங்குன்றன் எனும் மாணவனே சடலமாக மீட்க்கபட்டுள்ளார்.குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை தொடர்துள்ளார். இன்று காலை அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டுள்ளனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்ட போதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றுள்ளனர்.அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த போது குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments