யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை!

You are currently viewing யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை!

யாழ்.பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவன் ஒருவர், புதுமுக மாணவர்கள் மீது பகடிவதையில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும் மாணவர், விசாரணைகள் முடியும் வரை பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்குள்ளும் நுழைய முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீடாதிபதியினால்  இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று(புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகடிவதைக்கு உள்ளாக்கியதுடன் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் நலச்சேவை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments