யாழ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவருக்க கொரோனா!

யாழ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவருக்க கொரோனா!

யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும்

கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருவரிடமும் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று மாலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பேலியகொட மீன் சந்தை கொரோனா தொற்று பரவல் கொத்தணியுடன் தொடர்புடைய தென்னிலங்கையைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தொற்றுக்குள்ளான இருவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டபோது தனிமைப்படுத்தல் விடுதியிலேயே அனுமதிக்கப்பட்டமையாலும் மக்கள் பீதியடையதேவையில்லை.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments