யாழ் மாதகல் கடற்படை விடுதியில் தங்கியிருந்த 14 பேர் தனிமைப்படுத்தல்!

யாழ் மாதகல் கடற்படை விடுதியில் தங்கியிருந்த 14 பேர் தனிமைப்படுத்தல்!

ஹம்பகா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுக்கு ஹம்பகா பொதுவைத்தியசாலையில் சிகிச்சையளித்த தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவர் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்துள்ள நிலையில் அவருடன் சேர்த்து 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினால் நடத்தப்படும் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த நிலையில் அவர் அடையாளப்படுத்தப்பட்டு அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். இது தொடர்பாக இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், தற்போது ஹம்பகா மாவட்டத்திலிருந்து தொழிலுக்காவும் பல்கலைகழகத்திற்கும் வருவோர் தற்காலிக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றார்

பகிர்ந்துகொள்ள