யாழ் மாநகர சபை ஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம்!!

யாழ் மாநகர சபை ஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம்!!

யாழ் மாநகரசபை சுகாதரப்பகுதி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஊழியர்கள் மாநகரசபை வட்டாரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அவர்களுக்கான அலுவலகங்களில் விரல்ரேகைப் பதிவில் பதிந்தே வரவு கணிக்கப்பட்டு வந்துள்ளது. குறித்த வட்டாரங்களின் அந்த விரல் ரேகை இயந்திரங்கள் ஒரே தடவையில் செயலிழந்து போய்விட்டதால் அது தொடர்பாக யாழ் மாநகரசபை நிர்வாகம் ஊழியர்களிடத்தில் சந்தேகம் கொண்டு அவர்களிடத்திலேயே அந்த இயந்திரத்திற்கான பணத்தை அறவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால் குறித்த சுகாதார ஊழியர்கள் விசனமுற்றே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

பகிர்ந்துகொள்ள