யாழ் மாநகர மேயர் கைது ஜனநாயகத்திற்கு உச்சம் தலையடி!

யாழ் மாநகர மேயர் கைது ஜனநாயகத்திற்கு உச்சம் தலையடி!

யாழ்மாநகர மேயர் மணிவண்ணன் சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்புப்பிரிவால் சிறீலங்கா நேரம் முன்னிரவு 1:45 மணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர காவல்பணியாளர்களின் சீருடை சர்ச்சை காரணமாக நேற்று 6 மணிநேரம் விசாரணை செய்த சிறீலங்காப்படையினர் சீருடைகளை வாங்கிச்சென்றதன் பிற்பாடு சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் இன்று தேசியபாதுகாப்பு சம்மந்தமாக அவசர சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் அவர்கள் சிறீலங்கா நேரம்(09.04.21) முன்னிரவு 1:45 மணியளவில் கைதுசெய்யப்பட்டு வவுனியா பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இது தமிழரின் ஜனநாயக செயற்பாட்டிற்கு மீண்டும் சிறீலங்காவால் தரப்பட்ட உச்சந்தலையடியாகவே பார்க்கமுடிகின்றது.

பகிர்ந்துகொள்ள