யாழ்.மாவட்டத்தில் 27 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் பாதிப்பு, 2 வீடுகள் முற்றாக சேதம்!

யாழ்.மாவட்டத்தில் 27 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் பாதிப்பு, 2 வீடுகள் முற்றாக சேதம்!

நிவர்” புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 27 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் மேலும் விபரம் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இதுவரை 103 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்தோடு சில் பகுதிகளில் காற்றின் தாக்கமும் கானப்படுகின்றது.இவற்றின் அடிப்படையில் இதுவரை 27 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் பாதிப்படைந்துள்ளனர். 

அதேபோன்று இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்ததோடு 19 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் சேதமடைந்த வீடுகளில் அதிகமாக பருத்தித்துறை பகுதியில் 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது என்றார்.

3 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments