யாழ்.மாவட்டத்தில் 5,731 பேர் தனிமைப்படுத்தல் !

You are currently viewing யாழ்.மாவட்டத்தில் 5,731 பேர் தனிமைப்படுத்தல் !

யாழ் மாவட்டத்தில் தற்போது 5,731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகிய 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகிய சுமார் 2 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 5,731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என்றார்

பகிர்ந்துகொள்ள