யாழ்- வல்வை- சீலப்புலத்தில் 40 வீடுகள் படையினரால் சோதனை இருவர் கைது!

யாழ்- வல்வை- சீலப்புலத்தில் 40 வீடுகள் படையினரால்  சோதனை இருவர் கைது!

யாழ்.வல்வெட்டித்துறை கெருடாவில்- சீலாப்புலம் பகுதியில் நேற்று அதிகாலை படையினர் சுற்றிவளைப்பு இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கொம்மாந்துறையில் கடந்த வாரம் கிணறு ஒன்றிலிருந்து 3 குண்டுகள் மற்றும் துப்பாக்கியும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் வல்வெட்டித்துறை கெருடாவில் – சீலாப்புலம் பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணிவரை படையினர் காவல்துறையினர் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.


ஊரணி படை முகாம் படையினரும் வல்வெட்டித்துறை காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த இந்தத் தேடுதலில்

சுமார் 40 வீடுகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இதன்போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments