யாழ் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படை உத்தியோகத்தருக்கு கொரோனா!

யாழ் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படை உத்தியோகத்தருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (23) உறுதிபடுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 322 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் நால்வருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது .

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படும் இருவருக்கும்மே கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள