யாழ். வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு தட்டுப்பாடு!!

Default_featured_image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 90 வரையான ஒக்சிஜன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்ததாகவும் எனினும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறித்த சிலிண்டர் பாவனை 180க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து வாகனங்கள் அனுராதபுரம் சென்று சிலிண்டர்கள் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். எனவே, பொதுமக்கள் தற்போதுள்ள நிலையை அனுசரித்து அனைவரும் செயற்படுவதன் மூலம் குறித்த தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments