ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,598 பேருக்கு கொரோனா தொற்று!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,598 பேருக்கு கொரோனா தொற்று!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 262,843 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று 113 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2,418 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 58,226 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (14,62,622 பேர்), இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் (274,367 பேர்) உள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments