ரஷ்யாவில் கொரோனா ; இரண்டாவது நாளாக, பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது!

You are currently viewing ரஷ்யாவில் கொரோனா ; இரண்டாவது நாளாக, பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது!

ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3.619.523 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 250,478 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் இன்று புதிதாக 10,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,45,268 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இன்று 76 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 18,095 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த போதிலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் அங்கு குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள