ரஷ்யாவில் கொரோனா : நாடு முழுவதையும் தனிமைப்படுத்தும் ரஷ்ய பிரதமர்!

  • Post author:
You are currently viewing ரஷ்யாவில் கொரோனா : நாடு முழுவதையும் தனிமைப்படுத்தும் ரஷ்ய பிரதமர்!

மாஸ்கோவை முன்மாதிரியாகக் கொண்டு ரஷ்யா முழுவதும் மூடப்பட வேண்டும் என்று ரஷ்ய பிரதமர் Mikhail Misjustin கூறியுள்ளார்.

ரஷ்யாவில் பதிவுசெய்யப்பட்ட கூடுதலான அல்லது முழுவதுமான கொரோனா வைரஸ் தொற்றுக்கள் மாஸ்கோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், உண்மையான தொற்றுநோய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் நகரசபை தலைவர் Sergej Sobjanin எச்சரித்துள்ளார்.

ரஷ்யா அனைத்து போக்குவரத்திற்குமான எல்லைகளை மூடியுள்ளது, ஆனால் சரக்கு மற்றும் இராஜதந்திரிகள் வருகை உட்பட சில விதிவிலக்குகள் நடைமுறையில் உள்ளன.

ஜனாதிபதி Vladimir Putin கடந்த வாரம் அனைத்து ரஷ்ய தொழிலாளர்களும் கொரோனா வைரஸ் காரணமாக ஊதியத்துடன் ஒரு வாரம் விடுமுறை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த திட்டத்தை ரஷ்ய ஊடகங்கள் “கொரோனா வைரஸ் விடுமுறை” என்று அழைத்தன.

நோர்வேயில் போலல்லாமல், வயதானவர்கள் கிராமப்புறங்களில் உள்ள சிறிய குடிசைகள் மற்றும் விடுமுறை இல்லங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். (NTB)

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள