ரஷ்யாவில் கொரோனா ; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது!

ரஷ்யாவில் கொரோனா ; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4.956,725 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 323,091 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், ரஷ்ய நாட்டிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 299,941 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு மேலும் 115 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை இப்பொழுது 2,837 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 76,130 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments