ரஷ்யாவுக்கு தடை, உக்ரைனுக்கு ஆயுத உதவி: கனடா அதிரடி!

You are currently viewing ரஷ்யாவுக்கு தடை, உக்ரைனுக்கு ஆயுத உதவி: கனடா அதிரடி!

கனடா உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கவுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்கிறது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதற்காக கனடா, உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-tank weapons) மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை வழங்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைனின் வீரமிக்க பாதுகாப்புக்கு கனடா தொடர்ந்து ஆதரவை வழங்கும். ரஷ்யாவிலிருந்து அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதிகளையும் தடை செய்யும் எங்கள் நோக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம், என்று கூறினார்.

இந்த கச்சா எண்ணெய் தான் ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் அவரது தன்னலக்குழுக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் ஒரு தொழில் என்பதால் கனடா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. கனடா ஏற்கனவே உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தற்ற ஆயுதங்களை (non-lethal) அனுப்பியுள்ளது, மேலும் சர்வதேச வங்கிக் கொடுப்பனவுகளுக்கான SWIFT அமைப்பிலிருந்து ரஷ்யாவை அகற்றுவதை ஆதரிப்பது உட்பட பல தடைகளை ஆதரித்துள்ளது.

“நாங்கள் உக்ரைனுக்கு இன்னும் (lethal) ஆயுத உதவிகளை வழங்குகிறோம், நாங்கள் 100 கார்ல் குஸ்டாஃப் டாங்கி எதிர்ப்பு ஆயுத அமைப்புகளையும் 2,000 ரொக்கெட்டுகளையும் அனுப்புவோம், அவற்றை விரைவில் வழங்க நாங்கள் பணியாற்றுவோம்” என்று கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

இதனிடையே நேற்று, வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly), G7 நாடுகளின் குழு ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரும் என்று கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments