ரஷ்யாவை கடுமையாக எச்சரித்த ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்!

You are currently viewing ரஷ்யாவை கடுமையாக எச்சரித்த ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். ரஷ்யாவின் மிருகத்தனமான நடவடிக்கை தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேக்ரான், மேலும் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். போர் சூழல் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக மேக்ரான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளும் மொத்தமாக உலக நாடுகளின் தேவையில் 25% அளவுக்கு கோதுமை ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை மேலும் நீடிக்கும் எனில், ஐரோப்பிய ஒன்றியம் மேலதிக, கடுமையான தடைகளை விதிக்க நேரிடும் என மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிப்ரவரி 24 அன்று புடின் தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப உத்தரவிட்டதை அடுத்து மேற்கு நாடுகள் ஏற்கனவே ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன, இது அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக சமீப வாரத்தில் பலமுறை ரஷ்ய ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டுள்ள மேக்ரான், ஐரோப்பிய ஒன்றியம் மேலதிக தடைகளை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் – பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கியுள்ளன.

மட்டுமின்றி, ரஷ்யாவுக்கான ஏற்றுமதிக்கு வரம்புகளை விதித்தது மற்றும் ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.

குறிப்பிட்ட சில நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதுடன், ரஷ்ய இறக்குமதிக்கு சார்ந்திருக்கும் சூழலை எதிர்கொள்ள தயாரானது.

பல மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் ரஷ்யாவில் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளை விட ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் எரிவாயுவை அதிகம் நம்பியுள்ளது, ரஷ்யாவிடமிருந்து 40% அளவுக்கு இறக்குமதி செய்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments