ரஷ்ய அதிபருக்கு வாழ்நாள் பாதுகாப்பு! கைச்சாத்திட்ட ரஷ்ய அதிபர்!!

You are currently viewing ரஷ்ய அதிபருக்கு வாழ்நாள் பாதுகாப்பு! கைச்சாத்திட்ட ரஷ்ய அதிபர்!!

ரஷ்ய அதிபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்நாள் பாதுகாப்பு அளிக்கும் புதிய சட்டமூலத்தில் ரஷ்ய அதிபர், “Vladimir Putin” கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய சட்டமூலத்தின் பிரகாரம், பதவியில் இருக்கும்போதோ, அல்லது பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின்போ, எவ்விதமான குற்றச்சட்டுக்கள் தொடர்பாகவும் அதிபரையும் குடும்பத்தினரையும் கைது செய்யவோ, விசாரிக்கவோ, குற்றம் சாட்டப்படவோ, குறைந்தபட்சம் அவர்களது உடமைகளை சோதனை போடவோ, சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருக்கும்வரையிலும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இருந்த சட்டப்படி, பதவியில் இருக்கும் அதிபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இவ்வாறான விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் இவ்விதிவிலக்கு திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் நிலையே இருந்துவந்தது.

இப்புதிய சட்டமூலத்தை பிரகாரம், தற்போதைய அதிபர் “Vladimir Putin” எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு வரையிலும் ரஷ்ய அதிபராகவே தொடர்வதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள