ரஷ்ய ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

You are currently viewing ரஷ்ய ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உடனான நேர்காணலை ஒளிபரப்புவதையையோ வெளியிடுவதையோ தவிர்க்குமாறு ரஷ்யாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு ரஷ்ய ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உக்ரைன் தலைவரைப் பேட்டி கண்ட பத்திரிக்கைகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.

ரஷ்யாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு குழு சமூக ஊடகங்களிலும், அதன் இணையதளத்திலும் இது குறித்து ஒரு சிறிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பல ரஷ்ய பத்திரிக்கைகள் Zelensky உடன் நேர்காணல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த நேர்காணலை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி Roskomnadzor (கண்காணிப்பு அமைப்பு) ரஷ்ய ஊடகங்களை எச்சரிக்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கைக்கான காரணம் அதில் தெரிவிக்கப்படவில்லை.

ஜெலென்ஸ்கி பல ரஷ்ய பத்திரிக்கைகளுக்கு பேட்டி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேர்காணலில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் நேர்காணலை வெளியிடுவதற்கான சட்டபூர்வமான தன்மை குறித்து சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments