ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்ககுதல்!

You are currently viewing ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்ககுதல்!

ருக்கி அருகே கருங்கடலில் ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது, நீரில் செல்லக் கூடிய ட்ரோன் மூலம் உக்ரைன் தாக்ககுதல் நடத்தியுள்ளது.

துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில் ரஷ்யாவை சேர்ந்த ‘கைரோஸ்’ என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. காலி டேங்கர்களுடன் ரஷ்யாவை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் ட்ரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.

தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் கப்பலில் இருந்த 25 மாலுமிகளை மீட்டனர்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலான ‘விராட்’ மீதும் ட்ரோன் தாக்குதல் நடந்தது. தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply