ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Misjustin) கொரோனா!

You are currently viewing ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Misjustin) கொரோனா!

ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Misjustin) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,498 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கூறுகையில், கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாக்க சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

பகிர்ந்துகொள்ள