லண்டன் தெருவை நடுங்க வைத்த கோர சம்பவம்!

You are currently viewing லண்டன் தெருவை நடுங்க வைத்த கோர சம்பவம்!

லண்டனின் பிரிக்ஸ்டன் பகுதியில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இருவர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், 12 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கார் ஒன்றின் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 7.50 மணியளவில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவலையடுத்து, சம்பவப்பகுதியில் பொலிசார், மருத்துவ உதவிக்குழுவினர், ஆம்புலன்ஸ் சேவை என குவிக்கப்பட்டது.

சம்பவப்பகுதியில் இருவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவசர முதலுதவி அளித்தும், மருத்துவமனை கொண்டு செல்லும் முன்னர் அவர்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும், உரிய முறைப்படி உடற்கூராய்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும், தற்போது அவர்கள் அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments