அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு லெபனான் நகரான ‘ஜவ்தார் அல்-கார்பியே’ பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் லெபனான் நாட்டு இராணுவ வீரர்கள் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக நுழைந்துள்ளனர்.
இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே அமெரிக்கா ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தின் நடைமுறைச் சாத்தியக்கூறுகளுக்கான முதல் சோதனையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் திட்டப்படி, தெற்கு லெபனானின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக வெளியேறும்.
அதே வேளையில், அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்களைக் பறிமுதல் செய்து, அரசாங்கத்தின் அதிகாரத்தை லெபனான் இராணுவம் முழுமையாக நிலைநிறுத்தும்.
இந்த திட்டம் ‘பைலட் ஸோன் திட்டம்’ (எனப் பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.










