லோறன்ஸ்குக்கில் இரண்டு குழந்தைகள் இறப்பு! தந்தை விடுதலை!

லோறன்ஸ்குக்கில் இரண்டு குழந்தைகள் இறப்பு! தந்தை விடுதலை!

ஞாயிற்றுக்கிழமை காலை லோரன்ஸ்கோக்கில் இறந்து கிடந்த இரண்டு குழந்தைகளின் தந்தை இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார். என குற்றம் சாட்டப்பட்டவரின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார் இந்த சம்பவத்தில் அந்த நபர் குற்றம் சாட்டப்பட்டாரா, அல்லது அவர் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை  ஆதாரங்கள் சரியானமுறையில் கிடைக்கபெறாததால்  அவர் மீதான சந்தேகம் பலவீனமடைந்துள்ளதாக காவல்த்துறை தெரிவித்துள்ளது.விசாரணை நீண்ட நேரமாக இடம்பெற்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் எனினும் நகரசபையின் நெருக்கடி குழுவால் கண்காணிக்கப்படுகின்றார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன

இதேவேளை இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்த நபர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ளனர் குழந்தைகளின் தாய் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விபரங்களை இன்று திங்கட்கிழமை தெரிவிக்க இருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments