கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தரின் உயிரை பறித்த பயங்கர விபத்து!

You are currently viewing கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தரின் உயிரை பறித்த பயங்கர விபத்து!

கிளிநொச்சி மாவட்டம் – பாரதிபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (25-08-2022) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயதுடைய துரைராசா டிலக்சன் என்னும் இளம் குடும்பஸ்தர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியைச்ச சேர்ந்த உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர், கப் வாகனத்தின் சாரதியை கைது செய்து, இன்று நீதிமன்றில் முன்னிறுத்தினர்.

குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments