வடகிழக்கு மக்களே அவதானமாக இருங்கள்!

வடகிழக்கு மக்களே அவதானமாக இருங்கள்!

வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு பிராந்தியத்தில் வலுவடைந்துள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து, திருகோணமலையிலிருந்து தென் கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

BUREVI சூறாவளி மேலும் வலுவடைந்து, இன்று (02) மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 75 கிலோமீற்றர் முதல் 85 கிலோ மீற்றர் வரை வீசலாம் என வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கடல் பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதால் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களில் மழை பெய்து வருவதோடு, திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments