வடகொரிய அதிபர் பாராட்டு ; கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி!

வடகொரிய அதிபர் பாராட்டு ; கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி!

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ள சீனாவுக்கு வடகொரிய அதிபர் Kim Jong Un பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரசால் 82,886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 77,993 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். சீனாவின் பல மாகணங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபர் Xi Jinping கிற்கு, வடகொரிய அதிபர் Kim Jong Un பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வடகொரியவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய அதிபர் Kim பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம் உடல் நலம் குறித்து சீன அதிபர் Xi Jinping விசாரித்தார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments