வடக்கிலும் தீவிரமாக பரவும் கொரோனா தொற்றுக்கள்!

You are currently viewing வடக்கிலும் தீவிரமாக பரவும் கொரோனா தொற்றுக்கள்!

வட மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 71, கிளிநொச்சி – 32, முல்லைத்தீவு -13, வவுனியா -14 மற்றும் மன்னாரில் -9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆபத்தான டெல்டா திரிவு வைரஸ் வேகமாகப் பரவுவதால் மீண்டும் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகின்றது. அதேபோன்று வடக்கிலும் மீண்டும் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

வவுனியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 38 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழைய பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்த 24 பேர், சந்தை உள்வட்ட வீதியைச் சேர்ந்த 11 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 03 பேர் உட்பட்டவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் குடும்பத்தாரையும் தொடர்பிலிருந்தவர்களையும் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

அதேபோன்று

யாழ்ப்பாணம் வடமராட்சியின் பருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் மேலும் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள J/401 கிராம அலுவலர் பிரிவில் நேற்று 200இற்கும் அதிகமானவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அவர்களில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் அருவிக்குத் தெரிவித்தனர்.

இதனால் இதுவரையில் பருத்தித்துறையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments