வடக்கில் இரண்டாவது கொரோனா மரணம்!

வடக்கில் இரண்டாவது கொரோனா மரணம்!

வடமாகாணத்தில் இரண்டாவது கொரோனா நோயாளி இன்று மரணமடைந்துள்ளார்.
அதன்படி இந்த மரணம் மன்னாரில் இன்று காலை நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி அவருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இது மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்த முதலாவது கொரோனா மரணம் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments