வடக்கில் இருந்து தெற்கு சென்ற மீன் வாகன சாரதிகள் மூவருக்கு கொரோனா!

வடக்கில் இருந்து தெற்கு சென்ற மீன் வாகன சாரதிகள் மூவருக்கு கொரோனா!

வடக்கிலிருந்து பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு சென்ற கூலர் வாகனச் சாரதிகள் மூவர் கொரோனாத் தொற்றுக்கு உட்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் குருநகர், பருதித்தித்துறை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த மூவரே கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந் நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையிலேயே அவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல்கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவரும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றுக்குள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments