வடக்கில் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தல் ஒருவர் கைது!

வடக்கில் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தல் ஒருவர் கைது!

மன்னார் பேசாலை பகுதியில் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மன்னார் பேசாலை தேவாலயத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய அதே நபரே இன்று யாழ் பெரிய கோவிலிலும் நடமாடித்திரிந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்திற்கு இன்று நண்பகல் 12.30 மணியளவில் வந்த குறித்த நபர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் மிக நீண்ட நேரம் தனது உடமைகளுடன் நடமாடித்திரிந்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை கைது செய்து தற்போது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments