வடக்கில் தொடரும் கொரோனா தொற்று!

You are currently viewing வடக்கில் தொடரும்  கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் உட்பட 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து மாநகரசபை ஊழியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை

மன்னார் மாவட்டத்தில் கடந்த 15 ஆம் திகதி ; 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் பகுதி தபாலகத்தில் கடமை புரியும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தபாலகம் மூடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மன்னார் பகுதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
தலைமன்னார் தபாலகத்தில் கடமையாற்றும் 07 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments