வடக்கில் மேலும் 80 பேருக்கு கொரோனா!!

You are currently viewing வடக்கில் மேலும் 80 பேருக்கு கொரோனா!!

யாழ். மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 232 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 80 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 41 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 25 பேரும் வவுனியா மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேரும் மன்னார் மாவட்டத்தில் இருவர் என 80 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேருக்கும் கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் இருவருக்கும் பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும் பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கு தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கும் மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் நால்வரும் காக்கைதீவு மீன் சந்தையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் மூவர் ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள் மூவரும் மருந்தகம் ஒன்றின் 3 பணியாளர்களும் வீதி சீரமைப்பு பணியாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments