வடக்குகிழக்கு தென்பகுதி கடற்பரப்பில் மோசமான பாதிப்புகள் உருவாகலாம்!

வடக்குகிழக்கு தென்பகுதி கடற்பரப்பில் மோசமான பாதிப்புகள் உருவாகலாம்!

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளுடன் கப்பல் தீப்பற்றி எரிவதன் காரணமாக ஏற்படக்கூடிய பாரிய சூழல் பேரழிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் இலங்கை கடற்படை விமானப்படையுடன் ரஸ்ய இந்திய கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கப்பலின் அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவியுள்ளதாகவும் இதன் காரணமாக சூழல் பாதிப்பு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கப்பலில் தீப்பிடித்துள்ளதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு;ள்ளதாக கடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

நிலைமை மோசமடைந்தால் இலங்கையின் வடக்குகிழக்கு மற்றும் தென்பகுதி கடற்பரப்பில் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனகடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட கப்பலில் 1700 தொன் டீசல் உள்ளது என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் இந்த எரிபொருள் கசியக்கூடும் என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 23 பணியாளர்களில் 19 பேர் வெளியேற்றப்பட்டனர் பின்னர் தலைமை மாலுமியும் துணை மாலுமியும் வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீப்பிடித்த கப்பலிற்கு அருகில் காணப்பட்ட கப்பல் ஒன்றிலிருந்தே தகவல் கிடைத்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இலங்கை கடற்படை தனது கப்பல்களை பயன்படுத்தியது விமானப்படைஇணைந்துகொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் காணப்பட்ட ரஸ்யாவின் இரு யுத்தக்கப்பல்களும் இலங்கை கடற்படையுடன் இணைந்துகொண்டன என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments