வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் கடமையைப் பொறுப்பேற்றார்!

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் கடமையைப் பொறுப்பேற்றார்!

வடக்கு மாகாணத்தின் முதற் பெண் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று (02) நண்பகல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய இவர், தமது பதவிக் காலத்தில்  சிங்கள அரசாங்கத்திற்கு விசுவாசத்தை வெளிப்படுத்திய காரணத்தாலேயே இந்தப் பதவி உயர்வு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. 

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

மதத் தலைவர்களின் ஆசிகளைத் தொடர்ந்து ஆளுநர் செயலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில், அரச ஒட்டுக்குழுக்களும் கலந்துகொண்டனர். 

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இந்திய துணைத் தூதுவர் எஸ். பாலச்சந்திரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ. பத்திநாதன், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments