வடபகுதி மீனவர்கள் மூவர் தமிழகத்தில் கரைஒதுங்கியுள்ளார்கள்!

வடபகுதி மீனவர்கள் மூவர் தமிழகத்தில் கரைஒதுங்கியுள்ளார்கள்!

வடக்கை சேர்ந்த 3 மீனவர்கள் தாங்கள் மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில், இன்று (3) ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஸ்பவனம் கடற்பகுதியில் பலத்த காற்றால் திசை மாறி கரை சேர்ந்த இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் 3 பேரையும் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோன்சன், ரீகன், குருபரன் ஆகிய 3 பேரும் கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் படகு என்ஜின் பழுதானதால் பலத்த காற்று காரணமாக திசைமாறி புஸ்பவனம் பகுதிக்கு வந்த 3 மீனவர்களையும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கைது செய்துதோடு, அவர்களின் படகையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மீட்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தின் குருநகர், ஊர்காவற்றுறை மற்றும் கிளிநொச்சியின் பூநகரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments