வடமராட்சி கிழக்கில் கடற்படையினர் தேடுதல்!

வடமராட்சி கிழக்கில் கடற்படையினர் தேடுதல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இன்று காலை முதல் சிறீலங்கா கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குறித்த கடற்பகுதி ஊடாக அடையாளம் தெரியாத சிலர் படகுகள் மூலம் நாட்டிற்குள் வந்துள்ளதாக தெரிவித்து இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதி மீனவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மீனவர்களின் அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எனினும், சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments