வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவர் கைது, டிப்பரும் தடுத்து வைப்பு!

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவர் கைது, டிப்பரும் தடுத்து வைப்பு!

வடமராட்சி-கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நடவடிக்கை பருத்தித்துறை சிறீலங்கா காவல்த்துறையால் முறியடிக்கபடப்படுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடமராட்சி-கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்று வரும் நிலையில் நேற்றைய தினமும் நாகர்கோவில் பகுதியில் சட்டவிரோமாக மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இரண்டு டிப்பர் ரக வாகனங்களுடன் இருவர் பருத்தித்துறை சிறீலங்கா காவல்த்துறையால் நேற்று செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முன்லைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பருத்தித்துறை சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments