வடமராட்சி கிழக்கில் மின்னல் தாக்கி பெண் காயம்!

You are currently viewing வடமராட்சி கிழக்கில் மின்னல் தாக்கி பெண் காயம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, அம்மன் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட கடுமையான மின்னல் தாக்கத்தினால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மயில்வாகனம் ஜெயந்திமலர் (50) என்ற பெண்ணே கடுமையான மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இச்சம்பவத்தினால் மேலும் பலர் சிறிய அளவிலான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இடி, மின்னல் தாக்கம் காரணமாக அப்பகுதியில் பலரின் மின்சாதனங்களும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply