வடமராட்சி கிழக்கில் மீனவர்கள் உபகரணங்கள் எரிப்பு!

வடமராட்சி கிழக்கில் மீனவர்கள் உபகரணங்கள் எரிப்பு!

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று  தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின்  படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று  தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின்  படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது.தனிப்பனை கிராமத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராமத்தை சேர்ந்த தர்மபிரகாசம் உதயதாஸ் என்பவரின் படகே இவ்வாறு விசமிகளினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். அத்துடன் யாழ் மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளார்.இதனையடுத்து பொலிசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments