வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் கஞ்சா மீட்பு!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் கஞ்சா மீட்பு!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மது வரித் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர் .

இதன் போது வீட்டிறிருந்த18 கிலோ
கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்ட அதே நேரத்தில் குறித்த வீட்டிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்

இதேவேளை வடமராட்சிக்கிழக்கு உட்பட கரையோரப்பகுதிகள் கஞ்சா மற்றும் கொக்கையின் கடத்தல் கூடாரமாக மாறியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments