வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பெரும் தொகை கஞ்சா மீட்பு!

You are currently viewing வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பெரும் தொகை கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(31) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,  சிறீலங்கா இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் சிறீலங்கா விசேட அதிரடிப் படையினர் குறித்த பகுதியில்  விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில்,  54 பொதிகள் அடங்கிய 103 kg கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply