வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் 15 பவுண் நகைகள் அபகரிப்பு!

You are currently viewing வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் 15 பவுண் நகைகள் அபகரிப்பு!

வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் லட்சோப லட்சம் அடியவர்கள் பங்கேற்றனர்.

தேர்த்திருவிழாவில் நேற்றிரவு கிடைக்கப்பெற்ற 7 முறைப்பாடுகளின் அடிப்படையில் 15 தங்கப்பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை சிறீலங்கா காவல்துறையினர் கூறினர்.

இந்த நிலையில் தேர்த்திருவிழாவைவிட இன்றைய சமுத்திரத் தீர்த்த திருவிழாவில் அதிகளவு அடியவர்கள் பங்கேற்பர் என்ற அடிப்படையில் தமது நகைகள் மற்றும் பணம் தொடர்பில் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments