வடமாகாண கல்வித்துறையில் மீண்டும் அதிகார துஸ்பிரயோகம்!

You are currently viewing வடமாகாண கல்வித்துறையில் மீண்டும் அதிகார துஸ்பிரயோகம்!
வடமாகாண கல்வித்துறையில் மீண்டும் அதிகார துஸ்பிரயோகம் எல்லை மீறி செயற்படுகின்றதென்றால்,
NPP அரசாங்கம் தனது முகவரான ஆளுநரைக்கொண்டு திட்டமிட்டே இதனை செயல்படுத்துகிறது.
வடமாகாண கல்வியை திட்டமிட்டு சிதைக்கும் பின்னணி மட்டுமே இதன் நோக்கமாக உள்ளது.
சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் இடமாற்றச் சபையில்லாமல் இன்று மூன்றாவது ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்றால் அரசாங்க அனுசரணையின்றி இந்த சட்டவிரோத செயற்பாடு மீண்டும் நிகழ சாத்தியமில்லை.
போதாக்குறைக்கு ஜே.வி.பி ஆசிரியர் சங்கமும் குறித்த சட்டவிரோத இடமாற்ற செயற்பாட்டுக்கு துணை நிற்கிறது என்பதையும் உணர்வதற்கு ராக்கெட் சயன்ஸ் தேவையில்லை.
இப்பட்டியலிலும் வெளிமாவட்ட சேவையோ, ஒத்த சேவையோ செய்திராத பலர் மறைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இல்லாதவகையில்
தொடர்ச்சியாக நடைபெறும் சட்டவிரோத பின்னணியை ஆராய்ந்து பார்க்கும் போது –
வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கல்வி சமூகமும் இனியும் விழிப்படையவில்லையாயின்,
இனவழிப்பின் பின்னரும் தமிழரிடம் எஞ்சியிருக்கும் கல்வியும் அழிக்கப்படுவது  நிச்சயம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திருமிகு கயேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply