வடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பட்ட 400 போின் பெயர் பட்டியல்!

வடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பட்ட 400 போின் பெயர் பட்டியல்!

ஹம்பகா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய 400 போின் பெயர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், 

குறித்த பெயர் விபரங்களுக்குள் யாழ்.புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரு பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை. என கூறியிருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், 

குறித்த பெண்கள் ஹம்பகா மாவட்டத்திலுள்ள வேறு ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றியிருக்கலாம் எனவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் பாதுகாப்பு கருதி தொடரும் என கூறியுள்ளர். 

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 7 பெண்கள் ஹம்பகா மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments