வட்டுவாகல் போராட்டம் தொடர்கிறது! ஏ – 35 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு!

You are currently viewing வட்டுவாகல் போராட்டம் தொடர்கிறது! ஏ – 35 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு!

கடற்படையினருக்கு காணி சுவீகரிப்புக்கு நிலஅளவைத் திணைக்களத்தினர் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில் முல்லைத்தீவின் வட்டுவாகல் பகுதியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

இன்று காணி அளவீடு இடம்பெறும் என்று பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட அரசியல் பிரமுகர்களுடன் மக்களும் அங்கு திரண்டு எதிர்ப்பினைத் தெரிவித்துவருகின்றனர்.

சம்பவத்தின் போது பெருமளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அங்கு சென்ற நில அளவைத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடற்படை முகாமுக்குள் சென்றுள்ளதால் குழப்ப நிலை மேலும் அதிகரித்தது.

இதனை அடுத்து ஏ – 35 வீதியில் அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், வினோநோதராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உட்பட்ட பலரும் போராட்டத்தில் பங்குகொண்டுள்ளனர்.

இதனிடையே,

எதிர்வரும் பத்து தொடக்கம் 15ஆம் திகதிக்கு இடையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் ஒரு சந்திப்பினை மேற்கொள்வதற்கு பொலிஸாரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments