வட, கிழக்கிற்கான கொரோனா நிதி ஒதுக்கீடு போதாது – கஜேந்திரன்!

வட, கிழக்கிற்கான கொரோனா நிதி ஒதுக்கீடு போதாது – கஜேந்திரன்!

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மக்களை பழிவாங்கும் கருவியாக பொலிஸார் பயன்படுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

“நேற்று எமது கட்சி அலுவலகத்துக்கு சென்ற பொலிஸார் தமிழ் தேசத்தின் இராஜதந்திரியான சு.ப.தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப் படைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட நினைவேந்தலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து, கைது செய்வோம் என்று அச்சுறுத்தினர்.” என்றார்.

தொடர்ந்து பேசுகையில்,

“கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் வைத்தியர்களும் தாதியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுகின்றனர். இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆனாலும் வடக்கு, கிழக்கில் கொரோனா சிகிச்சை வைத்திய நிலையங்களை உருவாக்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. நிதி பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கில் கொரோனா நோயாளர்களை கையாள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுகிறது.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 12 ஆயிரம் நோயாளர்களால் பயன்படுத்தப்பட்டுவந்த வைத்தியசாலை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.

அதன் காரணமாக இங்கு சிகிச்சைக்கு செல்லும் மக்கள் 40 கி.மீ. தொலைவில் உள்ள பருத்தித்துறை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது. இங்கு 12 ஆயிரம் நோயாளர்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு மாற்று வைத்திய முறைகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்” ன்றார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments