வட கொரியாவில் உள்ள தனது தூதரகத்தை மூடியுள்ளது பிருத்தானியா!

வட கொரியாவில் உள்ள தனது  தூதரகத்தை மூடியுள்ளது பிருத்தானியா!

ஐக்கிய இராச்சியம், வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் (Pyongyang) உள்ள தனது தூதரகத்தை மூடியுள்ளது, மேலும் அனைத்து பிருத்தானியா தூதர்களும் வட கொரியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வட கொரியா கடுமையான நுழைவு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், நாட்டில் இதுவரை ஒரு தொற்று கூட பதிவாகவில்லை என்று வட கொரியா கூறிவருகின்றது.

பிருத்தானியா தூதரகம் புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் தூதர்கள் மார்ச் மாதத்திலேயே வட கொரியாவை விட்டு வெளியேறியுள்ளனர், இருப்பினும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் இன்னும் வட கொரியாவில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பியோங்யாங்கில் (Pyongyang) உள்ள ஸ்வீடன் தூதரகம் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளது. (NTB)

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments