வயல் சீரமைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

வயல் சீரமைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட சூரியன் ஆற்றுக்கு அருகிலுள்ள வயல்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மூவர், நேற்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து, சீரமைப்புப் பணிக்காகப் பயன்படுத்திய உபகரணங்களும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இனிவரும் காலங்களில், சூரியன் ஆற்றுக்கு அப்பாலுள்ள பகுதிகளில், மக்கள் விவசாயத்தில் ஈடுபடக்கூடாதென்று, வனவளத் திணைக்களத்தினரும் இராணுவத்தினரும் மிரட்டியதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருட பெரும்போக நெற்பயிர்ச் செய்கைக்காக வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போ​தே, அப்பகுதிக்கு வந்த வனவளத் திணைக்களத்தினரும் இராணுவத்தினரும், இந்தப் பகுதிகளில் இனிமேல் பயிர்ச்செய்கை செய்யமுடியாதெனக் கூறியதுடன், அங்கு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளைக் கைதுசெய்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments