வற்றாப்பளை பொங்கலில் ஊடகவியலாளருக்கு படையினர் அச்சுறுத்தல்!

வற்றாப்பளை பொங்கலில் ஊடகவியலாளருக்கு படையினர் அச்சுறுத்தல்!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உட்சவத்தில் இராணுவ தளபதி  செய்தி சேகரித்த முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் ச.தவசீலனுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.


வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தில் இராணுவ தளபதி கலந்துகொண்டுள்ளனர் அவர் வருகைதந்து ஆலய வளாகத்தில் உள்நுழையும் போது ஆலய நியதிக்கு அமைய மேலாடைகளை கழற்றிவிட்டு சென்றார் இதன்போது ஆலய வளாகத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதை ஊடகவியலாளர் ஒளிப்பதிவு செய்துள்ளார் இதன்போது இராணுவத்தினர்  ஊடகவியலாளரை ஒளிப்பதிவு செய்யவேண்டாம் என தெரிவித்து கமராவை கையால் மறைத்து கமராவை தட்டி விட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றய நேற்று (8) அதிகாலை சிறப்புற ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது


இந்நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அவர்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பௌத்த மத துறவிகள் உள்ளிடட குழுவினர்  நேற்று மாலை 5 மணியளவில் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு ஆலய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்து வறிய குடும்பங்கள் சிலவற்றுக்கு ஆலய முன்றலில் வைத்து உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்


இந்நிலையிலேயே அவர் ஆலயத்தின் உள்ளே வழிபாடுகளில் இருந்த நேரம் செய்தி சேகரிக்க தடை விதித்ததோடு செய்தி சேகரித்த ஊடகவியலாளரை சூழ்ந்துகொண்ட படையினர் அவரின் கமராவில் இருந்த வீடியோக்களை அளிக்குமாறும் மிரட்டியதோடு அவரை சூழ்ந்து படையினர் நின்று அச்சுறுத்தியுள்ளனர் இருப்பினும் ஊடாவியலாளரை ஆலயத்துக்கு வெளியில் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு அச்சுறுத்தியுள்ளனர் வீடியோவை அளிக்க ஊடகவியலாளர் மறுத்த நிலையில் இந்த வீடியோக்கள் வெளியே வர கூடாது என எச்சரித்துள்ளனர்


இருப்பினும் மக்களுக்கு உலருணவு வழங்கியமை மர  நடுகை என்பவற்றுக்கு வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது
இவ்வாறு ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதை ஏன் வெளியிட கூடாது என்பதும் இதனால் தென்பகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பை சேகரிக்க நேரிடும் என்பதும் இதற்கான காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு மக்களை வரவேண்டாம் என அறிவித்த படையினர் மற்றும் பொலீசார் அங்கு படையினரின் ஆதிக்கத்தில் படைத்தளபதி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.


இருந்தும் மாவட்டத்தில் உள்ள மக்கள் கால்நடையாக சென்று தங்கள் நேர்;த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளதுடன் இதற்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலயத்திற்குள் செல்வதற்கு படையினர் அனுமதிவழங்கியுள்ளார்கள்.


பக்த்தர்களை நீண்ட நேரம் ஆலயத்திற்குள் நிற்கவிடாமல் ஆலயத்திற்கு சென்ற அனைவரும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொலீசார் அறிவித்தல் வழங்கியுள்ள நிலையில் வைகாசி பொங்கல் நடைபெற்றுள்ளது.
மாலை 5.00 மணியளவில் விமானப்படையினரின் உலங்கு வானூர்த்தி வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு மேல் பூசொரிந்து பொங்கல் நிகழ்வினை படையினர் கொண்டாடியுள்ளார்கள்.
பக்த்தர்கள் தங்கள் மன ஆறுதல் மற்றும் நேர்த்திக்கடன்களை உரியமுறையில் செலுத்த முடியாத நிலையினையும் ஆற அமர்ந்து அம்மன் தரிசனம் மற்றும் வேண்டுதல்கள் மேற்கொள்ள முடியாத நிலையும் அங்கு  ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த முறை அதிகளவான மக்கள் ஆலய வழிபாட்டிற்கு செல்லாத நிலையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒருசில மக்களும் அருகில் உள்ள கிராம மக்களும் வழிபாடுகளில் ஈடுபட்டாலம் ஆலய வளாகத்தில் அதிகளவான படையினர் பொலீசாரையே காணக்கூடியதாக இருந்துள்ளது.–

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments